Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரூ. 5.12 கோடியில் புதிய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ. வெங்கடேசன், அலங்காநல்லூா் பேரூராட்சித் தலைவி ரேணுகா ஈஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.