செய்திகள் :

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : `வீரர்கள் முதல் கலெக்டர் வரை அவமதிப்பா?’ - சர்ச்சைகளும் சம்பவங்களும்

post image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலெக்டர் இருக்கையிலிருந்து எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விழாவில் மக்கள் சங்கடப்படும் வகையில் சொதப்பலான சம்பவங்கள் பல நடந்தன என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்... இனி அவை...!

அலங்காநல்லூர்

ஆன்லைன் அனுமதி என்றாலும்..!

"ஆன்லைன் அனுமதி என்றாலும், கோல்மால் நடக்கிறது, உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் அமைச்சர் மூர்த்தியின் சிபாரிசு உள்ள மாடுகளுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது" என்று அலங்காநல்லூர் வாடிவாசலில் முதல் நாள் இரவே போராட்டம் நடந்தது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தாமதமாக தொடங்கிய போட்டி!

வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிவிடும், அப்போதுதான் ஓரளவு காளைகள் அவிழ்க்க முடியும். ஆனால், உதயநிதி 8 மணிக்கு வர, தாமதமாகத் தொடங்கியது. எனினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டி உரிய நேரத்தில் தான் தொடங்கியது என சொல்லப்பட்டது. எனினும் தாமதமாக தான் தொடங்கியது என்கிறார்கள் மக்கள்.

ஜல்லிக்கட்டு மேடையில் மரியாதை(?)

விழா கமிட்டி சார்பில் மக்கள்  பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்குத்தான் ஜல்லிக்கட்டு மேடையில் மரியாதை செய்யப்படும். ஆனால், இன்பநிதிக்கு பேஜ் குத்தப்பட்டு, அவருக்கு துண்டு அணிவித்து அமைச்சர் மூர்த்தி மரியாதை செய்த சம்பவமும் நடந்தது.

உதயநிதி - இன்பநிதி

இன்பநிதி முன் வரிசையில் உதயநிதியுடன் அமர்ந்திருந்தபோது அவர் மீது விழுந்த தூசியை அமைச்சர் மூர்த்தி பவ்யமாக துடைத்து விட்ட வீடியோக்களும் பரவி வருகிறது.

கலக்டருக்கு அவமதிப்பா?

மேடையில் பின் வரிசையில்  நண்பர்கள் நிற்பதை இன்பநிதி பார்த்தவுடன், அவர்களை முன் வரிசையில் அமரவைக்க முயற்சி செய்ய, அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் உள்ளிட்ட முதல் வரிசையில் இருந்தவர்களை தள்ளி அமர சொன்ன சம்பவம் பல தரப்பிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர், தன்னை யாரும் எழ சொல்லவில்லை என சொன்னாலும், அது தொடர்பான வீடியோகள் படு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கலெக்டர் சங்கீதா அவமதிக்கப்பட்டதாக, சமூக அமைப்பு ஒன்றின் சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் சங்கீதா

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர்..!

அவிழ்க்காத காளைகளுக்கு தங்கக் காசுகளை கொடுக்கும்போது, மாட்டு உரிமையாளர்களை வாடா, போடா என்று ஒருமையில் மூர்த்தி பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜல்லிக்கட்டு தடையின்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியவர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர். முதல் வரிசையில் அமைரவைக்க வேண்டியவர் கடைசி வரை நின்று கொண்டே நிகழ்ச்சியை பார்த்தது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

இது தொடர்பாக கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பதிவில், ``ஜல்லிக்கட்டு வரலாற்றில் உச்ச நீதிமன்றம் சென்று போராடி வழக்காடி வெற்றி தீர்ப்பு பெற்ற ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி .ராஜசேகர் அய்யா அவர்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தில், வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி” என வேதனை தெரிவித்தார்,

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில், தமிழரசன் என்ற வீரர் தடுக்கப்பட்டது சர்ச்சையானது. அவர் பின்னர், சாதிய காரணக்களுக்காக தான் தடுக்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி மீது குற்றம்சாட்டினார்.

```அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள். இதற்கு முழு காரண‌ம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக  வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன்  புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???’” என நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பி உள்ளது. அலங்காநல்லூரிலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே எழுந்தது.

விசிக, மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பாலமேட்டில் மாடுகள் அவிழ்ப்பதில் சமூக ரீதியாக பிரச்னைகள் நடந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஆட்சியர், அமைச்சர்கள் கண்காணிப்பில் நடந்தும் இது நடக்கிறது என்றால் என்னவென்று சொல்ல?

அலங்காநல்லூரிலும் உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் போராட்டம் நடைபெற்றுள்ளது. தவிர, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது வருவாய்த்துறையினர், காவல்துறையினர் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. கோயில் விழா கமிட்டி சார்பில் தான் நடக்க வேண்டும். உள்ளூர் மக்கள் அங்கு நேரில் சென்று பார்க்க முடிவதில்லை. இது எல்லாவற்றுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) த... மேலும் பார்க்க

Canada - India Row: `நிஜ்ஜார் கொலை; உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை' - கனட அரசின் அறிக்கை சொல்வதென்ன?

கனடா - இந்தியா உறவில் விரிசல் விழக் காரணம் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. கனடாவில் கொல்லப்பட்ட இவரின் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்ச... மேலும் பார்க்க

Seeman : `பெரியாரை விமர்சித்த பெரிய கூலி கருணாநிதிதான்' - ஈரோட்டில் சீமான் காட்டம்

ஈரோட்டில் பெருமாள் மலைப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்... மேலும் பார்க்க

Arvind Kejriwal : `இது அமைதியைக் கெடுக்கும்...' - கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான தீவிரப் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஆம்... மேலும் பார்க்க

``மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியிருக்கிறார்கள்'' - வேங்கை வயல் மக்கள் சொல்வதென்ன?

`மூட்டைப் பூச்சிக்கு பயந்து..!' ”எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணையே குத்திக்கொள்வோமா?. நாங்களே மலத்தை அள்ளிப்போட்டுவிட்டு, அந்த தண்ணீரைக் குடிப்போமா?. ’பாவம் ஒரு பக்கம்... பழி ஒரு பக்கம்’ என்று காவல்து... மேலும் பார்க்க

Seeman: ``சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை சீமான் தமிழ்நாட்டில் செய்கிறார்' - ஈழத்தமிழர் சபேசன் பேட்டி

சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் vs பெரியார் என்று உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும்... மேலும் பார்க்க