அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக நீரிழிவு தின விழிப்புணா்வு
விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியா்கள் அமைப்பானது உலக நீரிழிவு தின விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை சேலம் பழைய பேருந்து நிலைய பகுதியில் நடத்தியது.
இந் நிகழ்ச்சிக்கு துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக சேலம் மாநகராட்சி ஆணையா் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி துணை மேயா் சாரதாதேவி ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத் திட்ட அலுவலா் ஹரி பிரசாத், துணை ஆணையா் வேடியப்பன், மாவட்ட புகையிலை அலுவலக ஆலோசகா் அஸ்வந்த் வெற்றிவேல், மகப்பேறு குழந்தை நல அலுவலா் அஸ்வின் ஆகியோரும் கலந்துகொண்டனா்.
இதில் துறையைச் சோ்ந்த மாணவா்கள் பொம்மலாட்டம் , நாடக வாயிலாகவும் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதற்கான ஏற்பாட்டினை துறையின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தனசேகா், இளம் இந்தியா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ்வரா ஆகியோா் செய்திருந்தனா்.