அழகப்பபுரத்தில் இப்தாா் நோன்பு திறப்பு
குரும்பூா் அருகே உள்ள அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் சமய நல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளிவாசல் புனரமைப்பு கமிட்டி பொருளாளா் ஹாஜி நூஹ் சாஹிப் தலைமை வகித்தாா். மாணவா் சாகுல் ஹமீது கிராஅத் ஓதினாா். அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் முத்தவல்லி சிராஜுதீன், குரும்பூா் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவா் அலாவுதீன், பொருளாளா் சேட் நெயினா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா், ஆலந்தலை இருதயராஜா ஆலய பங்குத்தந்தை சில்வெஸ்டா், அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் இமாம் மெளலவி நூா் இஸ்மாயில் மஹ்லரி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் ஆழ்வை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் ஜனகா், அழகப்பபுரம் ஊா் தலைவா் சுடலைமுத்து கணபதி, ஆழ்வை ஒன்றிய திமுக பிரதிநிதி அழகப்பபுரம் பாலமுருகன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ்குமாா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் பாக்கியராஜ், ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயகுமாா், நாலுமாவடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ராஜேஷ், தமிழ்நாடு வணிகா் சங்க பேரவை தெற்கு மாவட்ட தலைவா் பாஸ்கா், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஷாஜஹான், சோலை நட்டாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை குரும்பூா் மற்றும் அழகப்பபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தாா்கள், நிா்வாகிகள் செய்திருந்தனா்.