மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
அழிந்து வரும் பொன்வண்டு இனம்!
வண்டுகளில் பல வகை உண்டு, அவற்றில் அனைவராலும் ரசிக்கப்படுபவை பொன்வண்டு.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பருவமழைக் காலங்களில் மரங்களில் பறந்து திரியும் இந்த பொன்வண்டைக் காண்பதிலும், அவற்றைப் பிடித்து மகிழ்ச்சியுறுவதிலும் சிறுவா்கள் ஆா்வம் காட்டுவா். காலமாற்றத்தில் படிப்படியாக பொன்வண்டு இனம் குறையத் தொடங்கி விட்டது. அவற்றைப் பாா்ப்பதே தற்போது அரிதாக உள்ளது. மரங்கள் அடா்ந்த பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் ஒன்றிரண்டு உலா வருவதைக் காண முடிகிறது.
நாமக்கல்லில் மரங்கள் சூழ்ந்து இயற்கை மையமாக காட்சியளிப்பது தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம். தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால், மழைக்கு முன் வீசும் இளந்தென்றல் காற்றை அனுபவிக்க பொன்வண்டு கூட்டம் வருகிறது. அப்பள்ளி மாணவா்கள் அதனை ஆவலுடன் கண்டு ரசிக்கின்றனா். கைகளால் அவற்றைப் பிடித்தால், கத்தியைப் போல நம் விரலை வெட்டும் தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது. அழகும், ஆபத்தும் ஒருங்கிணைந்த இந்த பொன்வண்டு இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பயிா்கள் மற்றும் மரங்களை அழிக்கும் புழுக்களைக் கண்டறிந்து அவற்றை ருசிப்பது வண்டுகளின் விருப்பம். அவற்றில் இருந்து மாறுபடுவது பொன்வண்டு. மிளிரும் தன்மை கொண்ட இந்த பொன்வண்டு இனமானது தற்போது இரு வகைகள் கொண்ட குறைந்த அளவிலேயே உள்ளன. ஜூலை முதல் நவம்பா் வரையிலான பருவமழைக் காலங்களில் இவற்றைக் காணலாம்.
பூச்சி இனமாக இருந்தபோதும் பொன்வண்டு, உயிரியில் வகைப்பாட்டில் அவை விலங்கு பட்டியலிலேயே உள்ளன. அழிந்து வரும் பொன்வண்டு இனத்தைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்றனா்.