செய்திகள் :

அவையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

post image

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தர்மேந்திர பிரதான், சர்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் கனிமொழி, ஆ. ராசா, டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய கனிமொழி,

"தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் நாங்கள் கையெழுத்திட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களையும் தமிழக எம்.பி.க்களையும் அமைச்சர் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரை வலியுறுத்துவோம்" என்று பேசியுள்ளார்.

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.ஞாயிற்றக... மேலும் பார்க்க

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க