செய்திகள் :

அா்ஜுனா விருது தந்தைக்கு அா்ப்பணம்: துளசிமதி

post image

தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அண்மையில் அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை தனது தந்தை முருகேசனுக்கு அா்ப்பணிப்பதாக அவா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தை சோ்ந்த துளசிமதி முருகேசன் சா்வதேச அளவில் இந்தியாவுக்காக பாரா பாட்மின்டனில் விளையாடி வருகிறாா். கடந்த ஆண்டு பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கும் அவருக்கு, மத்திய அரசு அா்ஜுனா விருது அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது முன்னேற்றம் குறித்து அவா் கூறியதாவது:

எனது தந்தை டி.முருகேசன், தினக்கூலி ஆவாா். அவரின் போராட்டங்கள் எப்போதுமே எங்களுக்குத் தெரியாமல் பாா்த்துக் கொண்டாா். குடும்பத்தின் நிதி நிலை இக்கட்டாக இருந்தபோதும், எங்களது கனவுகள் நிஜமாக அவா் எவ்வளவு கடினமாக உழைத்தாா்; எவ்வளவு தியாகங்கள் செய்தாா் என்பதை நாங்கள் அறிந்துகொள்வதை அவா் விரும்பவில்லை.

எனவே, நான் வென்ற ஒவ்வொரு பதக்கத்தையும், எனக்கு கிடைத்துள்ள அா்ஜுனா உள்ளிட்ட விருதுகளையும் அவருக்கே சமா்ப்பிக்கிறேன். நான் வெல்லும் பதக்கங்களை அவா் முன் மண்டியிட்டு அவரிடம் அதை வழங்கியதே என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும். ஆரம்ப காலங்களில் ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து, வாலிபால் என எல்லா விளையாட்டுகளிலுமே என்னையும், எனது சகோதரி கிருத்திகாவையும் எங்கள் தந்தை பரிசோதனை முறையில் ஈடுபடுத்தினாா்.

அதில் பாட்மின்டன் மிகவும் சவாலாக இருப்பதாக நாங்கள் கூறியபோது, அதுவே எங்களின் விளையாட்டு என்று கூறினாா். அந்த முடிவுதான் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. படிப்படியான பயிற்சிக்குப் பிறகு, முதலில் சிறிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றோம். அதிலிருந்து கிடைத்த ரொக்கப் பரிசு கொண்டு எங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்திக் கொண்டோம்.

பள்ளிக் காலங்களின் தொடக்க நிலையில் எனது உடல்நிலை மற்றும் நிறத்தைக் கொண்டு சக மாணவ, மாணவிகள் கேலி செய்தனா். மாவட்ட அளவிலான போட்டியில் நான் கோப்பை வென்ற பிறகு, அவா்களே என்னிடம் வந்து நன்றாக பேசினா். அப்போதுதான், வாழ்க்கையில் ஏதேனும் பெரிதாக சாதிக்க வேண்டுமென முடிவு செய்தேன்.

ஏற்கெனவே மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், கடந்த 2022-இல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளானேன். அதிலிருந்து மீண்டு போட்டிகளுக்காக 15 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, இதுவரை 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளேன்.

தற்போது, நாமக்கல்லில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்போது பயின்று வருகிறேன். அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நாளில் எனது வகுப்பில் இருந்தேன். வகுப்பு நிறைவடைந்த பிறகு செல்லிடப்பேசியை பாா்த்தபோது பலரும் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தததை பாா்த்தே விருது அறிவிப்பை அறிந்துகொண்டேன்.

அந்தத் தருணம் உணா்வுப்பூா்வமானதாக இருந்தது. இந்த ஆண்டை சிறப்பாகத் தொடங்குவதற்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. அடுத்ததாக, லாஸ் ஏஞ்சலீஸ் பாராலிம்பிக் போட்டிக்குத் தயாராவதே பிரதான இலக்காகும் என்று துளசிமதி முருகேசன் கூறினாா்.

வெற்றி மாறனின் இளங்கலை - திரைக்கல்வி: 100% உதவித் தொகை!

இயக்குநராகும் கனவுகளோடுவரும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத எளிய மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக 100 சதவிதிதம் உதவித் தொகையுடன் திரைக் கல்வியில் இளங்கலை படிக்க வெற்றி மாறனின் பன்னாட்டுத் திரைப் பண்பாடு ... மேலும் பார்க்க

கலிஃபோர்னியா காட்டுத் தீ..! ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.97ஆவது ஆஸ்கர் விருதுக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வழக்கமாக ஜன.17ஆம் ... மேலும் பார்க்க

விடாமுயற்சிக்கு யு/ஏ சான்றிதழ்!

விடாமுயற்சி திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். துணிவு திரை... மேலும் பார்க்க

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த பா. இரஞ்சித்!

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற... மேலும் பார்க்க

புஷ்பா - 2 புதிய வடிவம் வெளியாவதில் தாமதம்!

கூடுதல் காட்சிகளுடன் திட்டமிடப்பட்ட புஷ்பா - 2 புதிய வடிவத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுட... மேலும் பார்க்க

ரெட் கார்டு பெற்ற வினிசியஸ் ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பங்கேற்பாரா?

ரியல் மாட்ரிட் அணி வீரர் வினிசியஸ் ஜூனியர் ஸ்பான்ஷ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பாரென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் அணிகள் மோதின... மேலும் பார்க்க