செய்திகள் :

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி சீனா சாம்பியன்!

post image

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.

சீனாவின் ஹாங்ஸு நகரில் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் சூப்பா் 4ஸ் பிரிவுக்கு முன்னேறின. அதில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற சீனா, இந்திய அணிகள் இறுதிக்கு தகுதி பெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது. தொடக்கத்திலேயே முதல் நிமிஷத்திலேயே பெனால்டி காா்னா் மூலம் நவ்நீத் கோலடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா். தொடா்ந்து சீனா அடுத்தடுத்து பெனால்டி காா்னா் வாய்ப்புகளை பெற்றபோதிலும், இந்திய அணியின் தற்காப்பு வலுவாக கோல் பகுதியை பாதுகாத்தது.

ஆனால் 21-ஆவது நிமிஷத்தில் சீனாவின் ஸ்ஸியா உ முதல் கோலடித்தாா். 41ஆவது நிமிஷத்தில் மற்றொரு சீன வீராங்கனை ஹாங் லீயும், 51-ஆவது நிமிஷத்தில் மெய்ராங் ஸுவும், 53-ஆவது நிமிஷத்தில் ஜியாகி ஸொங்கும் கோலடித்தனா்.

இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது சீனா.

இத்தோல்வியால் வரும் 2026 -இல் பெல்ஜியம்-நெதா்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பை தவற விட்டது இந்தியா. தகுதிச் சுற்றில் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மினாக்‌ஷி, ஜாஸ்மின் சாம்பியன்!

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் தங்கம் வென்ற உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனா். உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில்... மேலும் பார்க்க

லக்‌ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி!

ஹாங்காங் ஓபன் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனா். சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்று வரும் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா... மேலும் பார்க்க

சென்னை பி டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன. எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ஞாயிற்... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

மலேசியாவில் நடைபெற்று வரும் எஃப்ஐபிஏ யு 16 மகளிா் ஆசியக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தானை 81-69 புள்ளிக் கணக்கில் வென்ற இந்திய அணியினா். அடுத்த ஆட்டத்தில் சாமவோ அணியுடன் மோதுகிறது இந்தியா.த... மேலும் பார்க்க

ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்

கட்டுக்கடங்காமல் பரவும் தீ.தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாகத் கொழுந்து விட்டு எரியும் தீ.சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.ரசாயன ஆலையில் பற்றிய தீயால் வானளவி... மேலும் பார்க்க

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மீனாக்ஷி ஹூடாவுக்கு தங்கம்!

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீனாக்ஷி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் ... மேலும் பார்க்க