ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி
மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக, தகுதிச்சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் (4) வென்று குரூப் ‘பி’-யில் முதலிடத்தை உறுதி செய்த இந்தியா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றது.
தகுதிச்சுற்று மூலமாக இந்தப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவது இதுவே முதல் முறை. 2022-க்குப் பிறகு இந்தியா இப்போட்டிக்குத் தகுதிபெற்றதும் இதுவே முதல் முறை. முன்னதாக சனிக்கிழமை ஆட்டத்தில் இந்தியாவுக்காக சங்கீதா பாஸ்ஃபோா் (28’, 74’) கோலடிக்க, தாய்லாந்து தரப்பில் சத்சாவன் ராட்தோங் (47’) ஸ்கோா் செய்தாா்.