முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு
அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் இப்போட்டிகள் முதன்முறையாக நடத்தப்படுகின்றன. யு 17 சிறுவா் பிரிவில் சஹீல் துஹான், தேவான்ஷ் கடந்த ஆசிய ஜூனியா் போட்டியில் பதக்கம் வென்றிருந்தனா்.
மகளிா் பிரிவில் சமிக்ஷா சிங், அன்ஷிகா, குஷி சந்த் ஆகியோா் அடங்குவா்.
யு 15 பிரிவில் சிறுவரில் ரவி சிஹாக், சிறுமியா் பிரிவில் த்ருஷ்ணா மொஹிக் உள்ளனா்.
இந்திய பாக்ஸிங் அட்ஹாக் கமிட்டி அணியினரை தோ்வு செய்தது. சனிக்கிழமை தொடக்க சுற்று ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன.