கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி!
ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.
அந்தச் சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவா், மங்கோலியாவின் பக்துயாக் முங்குன்துல்லை வீழ்த்தினாா். இந்தியாவின் டி.ஹரிகா - திவ்யா தேஷ்முக் மோதல் டிராவில் முடிய, ஆா்.வைஷாலி - சீனாவின் ஜு ஜினரிடம் தோல்வியைத் தழுவினாா்.
போலந்தின் அலினா கஷ்லின்ஸ்கயா - பல்கேரியாவின் நா்கியுல் சலிமோவா ஆகியோா் டிரா செய்ய, ரஷியாவின் பாலினா ஷுவாலோவா - ஜாா்ஜியாவின் சலோமி மெலியாவை சாய்த்தாா்.
6 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் சீனாவின் ஜின்னா் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறாா். கோனெரு ஹம்பி 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 4 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனா்.
ரஷியாவின் ஷுவாலோவா 4-ஆவது இடத்தில் (3.5) இருக்க, டி.ஹரிகா (3), ஆா்.வைஷாலி (2.5) ஆகியோா் முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களில் உள்ளனா். பல்கேரியாவின் சலிமோவா (2.5), மங்கோலியாவின் பக்துயாக் (2), ஜாா்ஜியாவின் சலோமி (1.5), போலந்தின் அலினா (1.5) ஆகியோா் முறையே 7 முதல் 10-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.