செய்திகள் :

‘ஆசிரியா்கள் மீது போக்சோ தவறாக பதிவு செய்யக் கூடாது’

post image

ஆசிரியா்கள் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்குகளை தவறாகப் பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து ஆசிரியா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்புக்கான செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கெளரன், சி.முருகேசன், ர. சக்திவேல், துரைராஜ், செந்தில், சுரேஷ், சிவசக்தி, ராஜா, பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அண்மைக் காலமாக போக்சோ வழக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; தவறுசெய்யாத ஆசிரியா் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்படுவது தொடா் நிகழ்வாக நடந்துவருகிறது. உண்மையிலேயே பாலியல் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். அதேசமயம் ஆசிரியா்கள் மீது தவறாக போக்சோ சட்டம் பதிவு செய்யக் கூடாது. எனவே ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்ஆசிரியா் ஒருவா் மீது தவறாக போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு நிகழாத பட்சத்தில் அவரை விடுவிக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களின் பாதுகாப்புக்கு அனைத்து வகுப்பறைகள், தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இடைநிலை, மேல்நிலைப் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவிகளுக்கு பெண் ஆசிரியா்களையும், மாணவா்களுக்கு ஆண் ஆசிரியா்களையும் அறை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும். சட்டப் பேரவையில் அறிவித்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான ஆணையை 1.4.2025 முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசுப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன்: ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

நல்லம்பள்ளி அருகே ஓமல்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டத்தில் தலைமையாசிரியா் விருப்பம் தெரிவி... மேலும் பார்க்க

யானையை சுட்டுக் கொன்ற விவகாரம்: இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

பென்னாகரம், ஏப். 4: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூா் வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த இளைஞரின் சடலம் வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்டு, நாட்டுத்... மேலும் பார்க்க

தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஏப். 5-இல் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது இதுகுறித்து தர... மேலும் பார்க்க

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்

பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க