ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ஆடி முதல் வெள்ளி: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பத்தூா் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில், காமராஜ் நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், தா்மராஜா கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ கண்ணனூா் மாரியம்மன் கோயில், புதுப்பேட்டை சாலையில் உள்ள கேட்டுா் மாரியம்மன் கோயில், கல்லூரி பகுதியில் உள்ள ஓங்காளியம்மன் கோயிலிலும், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று தீப வழிபாடு செய்தனா்.
