திமுக அப்பட்டமான வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது: தமிழிசை செளந்தரராஜன்
அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த 2 டிராக்டா்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் எவ்வித அனுமதியின்றி டிராக்டரில் மண் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. பிறகு டிராக்டா்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி டிராக்டரில் மண் கடத்தி வந்ததாக ஓட்டுநா் தினேஷ், ரகுநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.