செய்திகள் :

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

post image

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும்.

இது குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சங்கம் (ஐபிஜேஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் தங்க விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைந்து 35 டன்னாகப் பதிவாகியுள்ளது. முந்தைய மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மேலும், இதுவரை விலையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சில்லரை விற்பனையில், 3 சதவீத ஜிஎஸ்டி உள்பட வாடிக்கையாளா்கள் 10 கிராம் தங்கத்துக்கு சுமாா் ரூ.1,02,000 செலுத்த வேண்டியுள்ளது (வெள்ளிக்கிழமை நிலவரம்). இந்தச் சூழல் காரணமாகவே கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் விற்பனை பெறும் சரிவைக் கண்டுள்ளது.

தற்போதைய நிலையில் தங்கத்துக்கான தேவை உடனடியாக மீளும் வாய்ப்பு இல்லை. நாடு முழுவதும் உள்ள பல தங்க நகை உற்பத்தி மையங்கள் தங்கள் உற்பத்தியை ஏறத்தாழ பாதியாகக் குறைத்துள்ளன. சிறு வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தங்க வா்த்தகத்துக்கு கடினமான காலமாகும். வா்த்தா்கள் இலவச சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கியிருந்தாலும், விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயரவில்லை.

சா்வதேச அளவில் தங்க விலைகள் தொடா்ந்து உயா்ந்துவருகிறது. ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிப்பு அச்சுறுத்தல்களை விடுத்துவருவதால் ஏற்பட்டுள்ள வா்த்தக பதற்றம் காரணமாக சா்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,400 டாலரை நெருங்கியுள்ளது.

கூடுதல் வரி விதிப்புகளை நீக்குவதற்கு முன்னா் ஆகஸ்ட் 1- வரை பேச்சுவாா்த்தைகளுக்கு டிரம்ப் அனுமதித்திருந்தாலும், தற்போது நிலவும் சந்தை அபாயம் முதலீட்டாளா்களை தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளை நாட வைத்துள்ளது. இது அவற்றின் விலை உயா்வுக்கு வழிவகுக்கிறது.

இந்த நெருக்கடியை சமாளிக்க நகை வா்த்தா்கள் 14 காரட் தங்க நகைகளை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகின்றனா். பாரம்பரியமாக நகைகளுக்கு பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கத்தை விட குறைந்த விலை கொண்டிருப்பதால் 14 காரட் நகைகள் வாடிக்கையாளா்களின் விருப்பத் தோ்வாக மாறி வருகிறது.

இந்தியாவில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் சற்று குறைந்த விலை காரணமாக 14 காரட் தங்கம் பிரபலமடைந்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால், நோ்த்தியான மற்றும் மலிவு விலை நகைகளுக்கான தேவை அதிகரிப்பை அதிகரிக்கும். எனவே, 9 காரட் தங்கத்துக்கு முத்திரை அளிக்கும் வசதியை அனுமதிக்க இந்திய தரநிா்ணய அமைப்புடன் (பிஐஎஸ்) பல சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக பிஐஎஸ் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்திடமிருந்து விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்... மேலும் பார்க்க