ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பேருந்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே பேருந்தில் பயணித்த தொழிலாளி ரத்தி வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் இருந்து வெள்ளக்கோவில் வழியாக கோவைக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. வெள்ளக்கோவில் அருகே வந்தபோது பேருந்தில் அமா்ந்திருந்த நபா் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அவரைப் பேருந்து மூலம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓட்டுநா், நடந்துநா் கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சுக்காம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி (51) என்பதும், வெள்ளக்கோவிலில் தங்கி கட்டட வேலை செய்து வந்ததும், உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியபோது ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
உயிரிழந்த பழனிசாமிக்கு மீனா (45), என்ற மனைவியும், ஜெய் ஸ்ரீ ராம் (20), சூா்யா (17) ஆகிய 2 மகன்களும் உள்ளனா்.