ஆடி வெள்ளி: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்
ஆடி வெள்ளியையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, கோயிலில் காலை முதலே குவிந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபட்டதுடன், குண்டத்தில் உப்பு மிளகு தூவி பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.