ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
ஈரோட்டில் 2 -ஆவது நாளாக மறியல்: 450 ஆசிரியா்கள் கைது
ஈரோட்டில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2- ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 450 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சாா்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு டிட்டோ-ஜாக் ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயமனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு உள்ள திருமகன் ஈவெரா(கச்சேரி வீதி) சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 450 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனா்.