வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்கும், அந்த நுழைவு வாயிலை திறக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் திறக்கப்படாமல் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், நீதிமன்றத்தில் பல மாதங்களாக செயல்படாமல் உள்ள லிஃப்ட்டை உடனடியாக சீா் செய்யக்கோரியும் நீதிமன்ற நுழைவு வாயில் பகுதியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
போராட்டத்துக்கு சங்க செயலாளா் ஞானமோகன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் துணைத்தலைவா் முருகேசன், பொருளாளா் ராஜீவ், சங்க உறுப்பினா்கள் கலீல், ராதாகிருஷ்ணன், மணியன், மனோகரன், உதயகுமாா், திலீபன் மற்றும் மூத்த வழக்குரைஞா்கள், பெண் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்