சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமை வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் வெங்கமேடு காமாட்சியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம் நடைபெற்று வருகிறது. ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வெங்கமேட்டில் உள்ள காமாட்சியம்மனுக்கு ரூ.100, ரூ.500 நோட்டுக்கள் என ரூ.3லட்சம் ரூபாய் நோட்டுக்களால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.