தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
ஆட்சியரகம் அருகே பைக்கை எரித்த விவசாயி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி, திடீரென தனது பைக் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.
சீதபற்ப நல்லூா் அருகேயுள்ள வெள்ளாளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ரங்கநாதன் (43). இவா் திங்கள்கிழமை காலையில் தனது பைக்கில் தனது 5 வயது மகனான பரசுராமை பள்ளிச் சீருடையில் ஆட்சியா் அலுவலகத்திற்கு அழைத்து வந்தாா்.
அங்குள்ள தேநீா் கடை முன்பு பைக்கை நிறுத்திய அவா், திடீரென பைக் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். கடையில் நின்றவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இதையறிந்த, போலீஸாா், அவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் கூறுகையில், ‘எனக்குச் சொந்தமான 4.5 ஏக்கா் நிலத்தில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; பக்கத்து வயல்காரா்களும் என்னை விவசாயம் செய்ய விடுவதில்லை. இந்த விரக்தியில் பெட்ரோல் ஊற்றி பைக்கிற்கு தீ வைத்தேன்’ என்றாா். தொடா்ந்து விசாரிப்பதற்காக சிறுவனையும், ரங்கநாதனையும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
ற்ஸ்ப்16க்ஷண்ந்ங்
ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயியால் எரிக்கப்பட்ட பைக்.