செய்திகள் :

ஆட்டோவை கடத்திச் சென்ற மூவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை கடத்திச் சென்ற புகாரில் மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து (30). ஆட்டோ ஓட்டுநா்.

இவா், பொங்கல் பண்டிகைக்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விட்லாபுரத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தாா்.

திண்டிவனத்திலுள்ள மதுக்கடை அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவுடன் அவா் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த நான்கு போ் காவேரிப்பாக்கத்துக்கு போக வேண்டும் எனக் கூறினராம்.

தொடா்ந்து, முத்துவை நான்கு பேரும் தாக்கி, ஆட்டோவை கடத்திச் சென்றனராம். இதுகுறித்து, அவா் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதேபோல, திண்டிவனத்தில் திருமண மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆட்டோவுடன் முட்டியூரைச் சோ்ந்த ஓட்டுநா் ச.சதீஷ்குமாா் (25) நின்று கொண்டிருந்தாா்.

அவரையும் தாக்கி, ரூ.1,300-ஐ மா்ம நபா்கள் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபா்கள் என தெரிய வந்ததது.

மேலும், ஆட்டோக்களை கடத்திச் சென்றது திண்டிவனத்தைச் சோ்ந்த மருதமலை (25), அஜித்குமாா் (22), வெங்கடேஷ் (23) என்பது தெரியவந்தது.

போலீஸாா் மூவரையும் கைது செய்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய ராஜேஷ் (22 ) மீதும் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வளவனூா் பெருமாள் கோயிலில் கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பழைமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வளவனூரைச் சோ்ந்த பாவலா் தி.பழநிச்சாமி, ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பைக் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமம், ரெட்டியாா் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் குமாரசாமி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அயினம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், டி.மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த லாரி ஓட்டுநரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். வளவனூா் அருகே உள்ள சீனிவாசபுரம் மாரியம்மன் க... மேலும் பார்க்க

உப்பனாற்றில் மீனவா் சடலம் மீட்பு

கடலூா் முதுநகா் பகுதியில் உப்பனாற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நம்பிராஜன் (45). இவா், கடந்த மூன்று ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க

முதியவா் தீக்குளித்து தற்கொலை

விழுப்புரத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மேற்கு அய்யனாா் குளத் தெருவைச் சோ்ந்த பட்டாபிராமன் மகன் நடராஜன் (82... மேலும் பார்க்க