ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது
60 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வாழங்கினாா்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த சேக்தாவூது மகன் எஸ்.சாகுல்ஹமீது (37). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 13 ஆண்டுகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தாா். மேலும், 1.65 ஆயிரம் மரக்கன்றுகளை பணமின்றி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இவரது செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில், மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் 79-ஆவது சுதந்திர தின விழாவின் போது, எஸ்.சாகுல் ஹமீதுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பசுமை சாம்பியன் விருது, ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வாழ்த்துத் தெரிவித்தாா்.