செய்திகள் :

ஆதரவின்றி உயிரிழந்த முதியவர்; குடும்பத்தினரைத் தேடி நெகிழவைத்த போலீஸ்

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அங்கிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருடன் உறவினர்கள் யாரும் இல்லாததால், உடலை யாரிடம் ஒப்படைப்பது என்று குழம்பிப்போய் நின்றார்கள் மருத்துவர்கள்.

ஒப்படைக்கப்பட்ட 74 சவரன் நகைகள்

அதேநேரத்தில், அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் அம்பேத்கரை சந்தித்த நடராஜன் என்ற நபர், `நான் பொறியாளர் பலராமன் என்பவரிடம் வேலை செய்துவந்தேன். அவர் திடீரென இறந்துவிட்டார்.

அவருக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து பலராமனின் உடலை சவக்கிடங்கில் வைக்குமாறு மருத்துவர்களிடம் கூறிய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், அவரின் மனைவி, பிள்ளைகள் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்தார்.

யாருக்கும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாததால், தன்னுடைய குழுவினருடன் பலராமனின் வீட்டைத் திறந்து ஆய்வுசெய்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் இருந்த 74 சவரன் தங்க நகைகள், ரூ.1.5 லட்சம் பணம், ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் போன்றவற்றை மீட்டு, காவல் நிலையத்தில் பத்திரப்படுத்தினார்.

அதன் பிறகு, தீவிர தேடுதலுக்குப் பிறகு பலராமனின் மனைவி, பிள்ளைகளைக் கண்டுபிடித்து அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.

பலராமனின் குடும்பத்தினரை மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழவைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து, இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் பேசினோம். ``தமிழ்நாடு காவல்துறை எப்போதும் மக்களின் நண்பன்தான். அதன் தொடர்ச்சிதான் இந்த நிகழ்வும்.

உயிரிழந்த பலராமன்

பலராமன் ஒரு பொறியாளர். இடம் வாங்கி, வீடுகளைக் கட்டி அதை விற்றுவரும் தொழில் செய்துவந்த அவரிடம், மேஸ்திரியாக வேலை பார்த்தவர்தான் நடராஜன்.

பலராமன் இறந்த விஷயத்தை அவர் என்னிடம் சொன்னபோது, பலராமனின் வீட்டில் கணிசமான அளவுக்குப் பணம் இருக்கலாம் என்று தோன்றியது. அதனால் அப்போதே பலராமனின் செல்போனையும், வீட்டுச் சாவியையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.

பலராமன் வசித்து வந்த வீடு அவ்வளவு பாதுகாப்பானதாக தெரியவில்லை. அதனால் மேஸ்திரி நடராஜன் மற்றும் அவருடன் வேலை செய்த இருவர், பலராமனின் தூரத்து உறவினர் ஒருவர், இரண்டு எஸ்.ஐ-க்கள், 4 கான்ஸ்டபிள்கள், எஸ்.பி-யின் தனிப்பிரிவு காவலர் ஒருவர் என 11 பேர் கொண்ட டீமை அமைத்தேன்.

அதன்பிறகு பலராமனின் வீட்டைத் திறப்பதில் இருந்து, சோதனை செய்து வெளியேறும் வரை அங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ எடுக்க உத்தரவிட்டு, டீமிடம் சாவியைக் கொடுத்து அனுப்பினேன். அப்படி சோதனை செய்தபோதுதான் நகைகள், ரொக்கப் பணம், சொத்துப் பத்திரங்கள் போன்றவை கிடைத்தன.

அவற்றை அப்படியே காவல் நிலையத்தின் லாக்கரில் வைத்தோம். இதையடுத்து பலராமனின் செல்போனில் இருந்த அவரின் மனைவி மற்றும் மகனின் எண்களுக்கு போன் செய்தபோது, அவர்கள் எடுக்கவில்லை.

அவர்களின் லொகேஷனை ஆய்வு செய்தபோது அது சென்னை பொத்தேரியைக் காட்டியது. பலராமன் இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதால், மேஸ்திரி நடராஜனை அழைத்துக்கொண்டு பொத்தேரிக்குச் சென்றோம்.

இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்

ஆனால், அவர்களின் முகவரியை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலமுறை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை என்பதால், திரும்பிவிட்டோம். ஆனாலும் பலராமனின் குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக போன் செய்து கொண்டிருந்தோம். அதன் பயனாக நான்காவது நாள் பலராமனின் மகன் தொடர்பில் கிடைத்தார்.

அப்போது அவரின் அப்பா இறந்த விஷயத்தை சொன்னதும், `அவரை நீங்களே அடக்கம் செய்து விடுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு `உங்கள் அப்பா, கோடிக்கணக்கில் பணம், நகையெல்லாம் வைத்திருக்கிறார்.

அதை உங்களிடம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னபோது சொல்ல, `எதுவும் எங்களுக்குத் தேவையில்லை’ என்று மறுத்திருக்கிறார் பலராமனின் மகன். அதன்பிறகு நான் பலராமனின் மனைவி இந்திராவை சமாதானப்படுத்தி அழைத்து, பலராமனின் உடலையும், உடமைகளையும் ஒப்படைத்தேன்.

உயிரிழந்த பொறியாளர் பலராமன் அதிகமாக கோபப்படும் நபராக இருந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய மகன், மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார் இந்திரா” என்றார் விரிவாக.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையம்

பலராமனின் மகன் முகேஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசியபோது, ``விசாரணை என்ற பெயரில் எங்களிடம் தேவையற்ற எந்தக் கேள்விகளையும் கேட்காமல், போலீஸார் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்கள். அவர்களுக்கும், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் சாருக்கும் எங்கள் நன்றி” என்றார்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர்.

என்ன பெத்த தாயே... இப்படி போயி சாகணும்னு உன் தலையெழுத்தா - கலங்கும் குடும்பங்கள் - Spot Visit

போன உசுரு திரும்ப வருமா...`உன்ன தூக்கிக் கொடுத்துட்டு நாங்க மட்டும் என்ன செய்ய போறோம்...' கரூர் நகர்ப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஏமூர் எனும் கிராமம். ஊருக்குள் நுழையும்ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் தனியாக நின்ற பெண்; துணையாக நின்ற ராபிடோ ஓட்டுநர்; வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

நவீன யுகத்தில் தொழில்நுட்பம் நம்மை சக மனிதனிடம் உரையாடுவதைக் குறைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம... மேலும் பார்க்க

Betta Kurumba பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர், தடம் பதித்த முதுமலையின் மகள் கின்மாரி

பழங்குடிகளின் தாய்மடி அல்லது தொட்டில் என வர்ணிக்கப்படும் நீலகிரியில் 6 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, இசைக்கருவிகள் , நட... மேலும் பார்க்க

பல் செட், கண்ணாடி இல்லை, டெக்னாலஜி அப்டேட், ஆங்கிலப் புலமை: 100 வயது ஆச்சர்ய மனுஷி சீதாலட்சுமி

திருப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பயணம்தான் வாழ்க்கை. அந்தப் பயணத்தில், நமக்கு வழிகாட்டவும், தடுமாறும்போது தாங்கிப் பிடிக்கவும், அனுபவங்களின் மூலம் ஆலோசனைகள் சொல்லவும் பெற்றோர் பக்கத்தில் இருப... மேலும் பார்க்க

”கைகளை உயர்த்தி வாழ்த்துங்கள்”- மாற்றுத்திறனாளி மாணவர்களை நெகிழ வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவர் தியாகராஜன் உரிய ... மேலும் பார்க்க

``எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள்'' - திருநங்கையை காதல் திருமணம் செய்த இளைஞர்!

"காதல்" பாலினத்தையும் கடந்தது`காதல்' என்ற இந்த உணர்வு சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். தற்போது இந்தக் காதல் பாலினத்தையும் கடந்ததாக நமக்கு நிரூபிக்க... மேலும் பார்க்க