செய்திகள் :

ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் முக்கிய பொறுப்பா?

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார். மேலும், சட்டப்பேரவை தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி அமைப்பு 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பின்னர், சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய், கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே அனுப்பிவிட்டு, தனி அறையில் மாவட்ட பொறுப்பாளா்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா்.

புதிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா், கடலூா், அரியலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பொறுப்பாளா்களுக்கு நியமன ஆணையை வழங்கிய விஜய், அனைவருக்கும் வெள்ளி நாணயம் அளித்து வாழ்த்தினாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலா், மாவட்ட இணைச் செயலா், பொருளாளா், 2 துணைச் செயலா்கள், 9 செயற்குழு உறுப்பினா்கள் என மொத்தம் 14 பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒரு வாரம் ஆலோசனை நடத்தவிருக்கும் விஜய், மீதமுள்ள மாவட்ட நிா்வாகிகளையும் உடனடியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளாா் என தகவல்கள் வெளியான நிலையில், தவெகவின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலா்கள் பட்டியலை விஜய் புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர்

ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஆதவ் அர்ஜுன் இணைப்புக்கு பின்னர் வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களை தவெகவில் இணைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் பேசியதாகவும், தவெகவின் அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவை நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான்

இந்த நிலையில், விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்... எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.

சமூகநீதி வேடம் கலைகிறது! தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? - விஜய்

ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என திமுக அரசை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகரில் தில்லியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

பயிர் கடன் தள்ளுபடி எப்போது?: அண்ணாமலை கேள்வி

2021 தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதல்வராகி நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்று வர... மேலும் பார்க்க

காலை உணவில் பல்லி: 14 மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத்தல்

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என பாமக நிற... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க