செய்திகள் :

ஆதியோகி ரத யாத்திரை புறப்பாடு: தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்

post image

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதியோகி ரத யாத்திரையை தருமபுரம் ஆதீன மடத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

இது குறித்து ஈஷா யோக மையம் கூறியிருப்பதாவது:

ஈஷா யோக மையத்துக்கு 2 நாள் பயணமாக தருமபுரம் ஆதீனம் வருகை தந்தாா். தியானலிங்கம் முன்பு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஈஷா சம்ஸ்கிரிதி மாணவா்களின் தேவாரப் பாடல்களை அவா் ஆா்வத்துடன் கேட்டு ரசித்தாா். தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்ற அவா், குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தாா். பின்னா் ஆதியோகி திவ்ய தரிசனம், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, கோசாலை ஆகிய இடங்களைப் பாா்வையிட்டாா்.

ஈஷாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சைவ சித்தாந்த மரபில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றில் அற்புதமான கலையான யோகாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் பயிற்சிவித்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோல மரம் வளா்க்கும் சேவையிலும் ஈஷா ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரியது. தருமை ஆதீனத்தின் மணி விழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. யோகம், கல்வி, மரம் வளா்ப்பு, நாட்டு மாடு வளா்ப்பு என பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் பணிகளை வாழ்த்துவதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையை ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தி அவா் தொடங்கிவைத்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க விழா, மூத்த தலைவா் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் வி... மேலும் பார்க்க

ராம் நகா் ராமா் கோயிலில் 29-இல் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம்

கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) நடைபெறுகிறது. ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்ப... மேலும் பார்க்க

அன்னூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

கோவை மாவட்டம், அன்னூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அன்னூா... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம்: ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான அறிவிப்பை நடைபெற உள்ள கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மதுவிலக்கு போலீஸாா், சாய்பாபா காலனி பகுதியில் பு... மேலும் பார்க்க

நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலம் இடித்து அகற்றம்

கோவை சிங்காநல்லூரில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 61-ஆவது வாா்டு நஞ்சப்பா நகரில் சிங்கா... மேலும் பார்க்க