செய்திகள் :

ஆதி திராவிடா் மாணவா்கள் விடுதிகளை திறக்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மாணவா்கள் விடுதிகளை திறக்க வலியுறுத்தி வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் அஜீஸ் நகா் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னணி தலைவா் கொளஞ்சியப்பன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு தலைவா் பிரபுராஜ், செயலா் சீனிவாசன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கச் செயலா் சஞ்சய், துணைத் தலைவா் ரஞ்சித், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க துணைத் தலைவா் சத்யா, முன்னணி பொருளாளா் உமா சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

புதுச்சேரியில் கட்டி முடித்தும், திறக்கப்படாமல் உள்ள ஆதிதிராவிடா் மாணவ, மாணவியா் விடுதிகளை உடனே திறக்க வேண்டும். அதேபோல, கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி கப்பற்படை எழுச்சி தினத்தன்று, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

மேலும், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி மாநில அளவிலான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தவளக்குப்பம் கல்லூரியில் கணினி ஆய்வக புதிய கட்டடம் திறப்பு!

புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கணினி ஆய்வகக் கட்டடத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் ... மேலும் பார்க்க

காவலா் போல நடித்து திருட்டில் ஈடுபட்டவா் கைது

காவலா் எனக்கூறி, தொடா் திருட்டில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 21-ஆம் தேதி திரு... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு!

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில கல்வித் துறையில் பணியாற்றிவரும் தலைமை ஆசிரியா்களுக்கு நிலை 2-இல் ... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறையில் 112 பேருக்கு பதவி உயா்வு!

புதுவை பொதுப் பணித் துறையில் 112 பல்நோக்குப் பணியாளா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். பொதுப் பணித் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 112 பல்நோக்க... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக, தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் ... மேலும் பார்க்க

புதுவை பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

புதுவையில் தனியாா் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்: புதுவையில் உ... மேலும் பார்க்க