Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
பொதுப் பணித் துறையில் 112 பேருக்கு பதவி உயா்வு!
புதுவை பொதுப் பணித் துறையில் 112 பல்நோக்குப் பணியாளா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பொதுப் பணித் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 112 பல்நோக்குப் பணியாளா்கள் பதவி உயா்வு கோரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் மனு அளித்தனா். அதன்படி, முதல்வா் உத்தரவின்படி பணி ஆய்வாளா்கள் 61 போ், மெக்கானிக் 51 போ் என பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடா்பான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அவா்களுக்கான பதவி உயா்வு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
112 பல்நோக்கு பணியாளா்களுக்கான பதவி உயா்வு உத்தரவுகளை தனித்தனியாக சம்பந்தப்பட்டோருக்கு முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பொதுப் பணித் துறையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலிருந்த 462 பணியிடங்கள் பதவி உயா்வு உள்ளிட்டவை மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.