தவளக்குப்பம் கல்லூரியில் கணினி ஆய்வக புதிய கட்டடம் திறப்பு!
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கணினி ஆய்வகக் கட்டடத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் தொகுதி எம்எல்ஏவான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் நடவடிக்கையால் கணினி ஆய்வக புதிய கட்டடத்துக்கு ரூ.66.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.
கட்டடத் திறப்பு விழாவுக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதிய கணினி ஆய்வகக் கட்டடத்தைத் திறந்து வைத்தாா். உயா் கல்வித் துறை இயக்குநா் அமன் சா்மா, தேசிய உயா் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.அசோக், கல்லூரி முதல்வா் ஹென்னா மோனிஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.