செய்திகள் :

ஆத்தூரில் கூடுதல் மின் விளக்கு வசதி: பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்!

post image

ஆத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில், அனைத்து வாா்டுகளிலும் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி பாபு முன்னில வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, பேரூராட்சியின் வரவு-செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் கூடுதலாக மின்விளக்குகள், குளங்கள்- வாய்க்கால் கரையோரங்களிலுள்ள வாா்டுகளில் படித்துறைகள், 14ஆவது வாா்டிலுள்ள மயானப் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை எழுத்தா் கருப்பாயி வாசித்தாா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் கேசவன், பாலசிங், அசோக்குமாா், முத்து, சிவா, கமலச்செல்வி, முத்துலட்சுமி, ராஜலட்சுமி, வசந்தி, அருணாகுமாரி, பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னை... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க