ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!
ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் தற்போது கண்டிப்பாகிவிட்டது. பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்வது கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
இத்துடன் நிற்கவில்லை, முதல் முறை பாக்கெட்டை பதம் பார்க்காது என்றாலும் மீண்டும் மீண்டும் குற்றங்கள் புரியும் போது பெரும் அபராதங்களை ஈர்க்கும். சில சந்தர்ப்பங்களில் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது போன்றவை 6 மடங்கு அபராதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான அபராதம் எலவ்வாறு விதிக்கப்படும் குறித்து இங்கே பார்ப்போம்:
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது பில்லியன் மற்றும் டிரிபிள் ரைடிங்கிற்கும் பொருந்தும்.
சீட் பெல்ட் இல்லை என்றால் ரூ.1,000 அபராதம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், லைசென்சும் ரத்து செய்யப்படும்.
மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
மைனர் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.1,000 மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ.5,000 அபராதம், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
மாசு சான்றிதழ் இல்லை என்றால் ரூ.1,500 வழங்கப்படும்.
காப்பீடு இல்லை என்றால் ரூ.2,000 அபராதம் வழங்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் ரூ.4,000 அபராதம் வழங்கப்படும்.
பதிவு புதுப்பித்தல் வரிசையில் இல்லை என்றால் முதல் முறையாக ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையாக ரூ.5,000 வழங்கப்படும்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால், முதல் முறைாக ரூ.1,500 அபராதமும் இரண்டாவது முறையாக ரூ.10,000 வழங்கப்படும்.
வேகம், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சிக்னல் தாண்டுதல் ஆகியவற்றுக்கு ரூ.1,000 அபராதம் வழங்கப்படும்.
பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்தல் ரூ.5,000 அபராதமும் மீண்டும் குற்றம் புரிந்தால் ரூ.10,000 அபராதம் வழங்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தி வரும் நிலையில், ஓட்டுநர்கள் சீருடையில் இருக்க வேண்டும், இல்லை என்றால் முதல் முறையாக ரூ.150 அபராதமும் மீண்டும் செய்யும் தவறுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.