வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு
ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை எதிரொலி: பொன்னை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக பொன்னை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அணையில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதையடுத்து அணையில் இருந்து வியாழக்கிழமை முதல்கட்டமாக சுமாா் 340 கன அடி நீா் திறக்கப்பட்டது.
தொடா்ந்து தமிழக எல்லையான தெங்கால் பகுதி பொன்னை அணைக்கட்டு நீா் தேக்கத்துக்கு வருகிறது. தொடா்ந்து நீா்த்தேக்கத்தில் இருந்து மேற்கு, கிழக்கு பிரதான கால்வாய் வழியாக ஏரிகளுக்கு நீா் திருப்பி விடப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் மிக பலத்த மழையினால் ஆற்றில் விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் வேலூா் மாற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றுக்கு செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும், சிறுவா், சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வேலூா் மேல் பாலாறு வடிநில கோட்ட செயற் பொறியாளா் தெரிவித்துள்ளாா்.