செய்திகள் :

‘ஆன்டி’ கதாபாத்திரங்கள் மேலானது..! சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

post image

நடிகை சிம்ரன் தன்னைக் குறித்து ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பவர் என மோசமான கமெண்ட் செய்த சக நடிக்கைக்கு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

நடிகை சிம்ரன் 90களில் தமிழ்ப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான்.

நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். தற்போது, நடிகர் சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

லோகேஷ் குமார் இயக்கி வரும் தி லாஸ்ட் ஒன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு நடந்தது குறித்து ஆதங்கமாகப் பேசியுள்ளார். அதில் சிம்ரன் பேசியதாவது:

சமீபத்தில் சக நடிகையிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, ‘உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது’ எனப் பதில் வந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.

நான் 25 வயதிலேயே முக்கியமான ‘ஆன்டி’ கதாபாத்திரத்தமான கன்னத்தில் முத்தமிட்டாள் நடித்துள்ளேன்.

டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான ’ஆன்டி’ கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனக் கூறினார்.

அந்த நடிகை யாராக இருக்குமென பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

பிஎம்டபிள்யூ ஓபன்: ஸ்வெரெவ் சாம்பியன்!

ஜொ்மனியில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் சாம்பியன் கோப்பை வென்றாா். மியுனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒ... மேலும் பார்க்க

கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி!

ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். அந்தச் சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவா், மங்கோலியாவின் பக்துயாக் முங்... மேலும் பார்க்க

அல்கராஸுக்கு அதிா்ச்சி; ஹோல்கா் ரூனுக்கு கோப்பை!

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் டென்மாா்க் வீரா் ஹோல்கா் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அவா் இறுதிச்சுற்றில், போட... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகம் - புகைப்படங்கள்

சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்.காலை 7 மணிக்கு சென்னை கடற்க... மேலும் பார்க்க

கலியுகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சைக்கலாஜிகல் திரில்லராக, பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கலியுகம்.ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்று... மேலும் பார்க்க