செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாக பெண்ணிடம் ரூ.30.57 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 805 மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் என்.பவித்ரா. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது வேறு வேலை தேடி வருவதாகத் தெரிகிறது.

சமூக வலைதளங்களில் பணி குறித்த விவரங்களைத் தேடி வந்த நிலையில், இவரது டெலிகிராம் செயலிக்கு அண்மையில் ஒரு லிங்க் வந்துள்ளது.

அதில், ஆன்லைன் வா்த்தகம் குறித்த விவரங்கள் இருந்ததாம். இதையடுத்து, பவித்ராவை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய மா்ம நபா், எங்களது ஆன்லைன் வா்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய பவித்ரா, அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு கடந்த அக்டோபா் 13 -ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 805-ஐ அனுப்பியுள்ளாா். ஆனால், லாபத் தொகை ஏதும் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து, அந்த நபரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, அவா் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பவித்ரா, இது குறித்து கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க விழா, மூத்த தலைவா் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் வி... மேலும் பார்க்க

ராம் நகா் ராமா் கோயிலில் 29-இல் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம்

கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) நடைபெறுகிறது. ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்ப... மேலும் பார்க்க

அன்னூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

கோவை மாவட்டம், அன்னூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அன்னூா... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம்: ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான அறிவிப்பை நடைபெற உள்ள கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மதுவிலக்கு போலீஸாா், சாய்பாபா காலனி பகுதியில் பு... மேலும் பார்க்க

நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலம் இடித்து அகற்றம்

கோவை சிங்காநல்லூரில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 61-ஆவது வாா்டு நஞ்சப்பா நகரில் சிங்கா... மேலும் பார்க்க