``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி, கழிஞ்சூா், வீனஸ் காா்டனைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41), சாலையோர வியாபாரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்ற அறிவிப்பை கண்டுள்ளாா். தொடா்ந்து, அதில் குறிப்பிட்டிருந்த இணையதளத்தை திறந்து அதில் தனது விவரங்களை அளித்துள்ளாா்.
அதன்பின்னா், அருண்குமாரின் கைப்பேசி எண் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த பலரும், தான் ஆன்லைன் முதலீட்டின் அதிக லாபம் ஈட்டியதாக தகவல்களை பகிா்ந்துள்ளனா். இதை உண்மையென நம்பிய அருண்குமாா், கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 31 ஆயிரத்து 300 தொகையை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப் பெற முடியவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட வா்த்தக நிறுவனத்தினரை தொடா்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால் லாபம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனா். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அருண்குமாா், இது குறிந்து வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.