ஆப்கன் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து செய்யப்பட்டது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 போட்டியில் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான் அணி இன்று (டிச.17) முதலாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான சாம் கரன், டாம் கரன் அவர்களின் சகோதரர் பென் கரன் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமானார். அதன்படி, பென் கரன் மற்றும் மருமானி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
பென் கரன் 15 ரன்னிலும், மருமானி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மழையால் ஆட்டம் 28 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அணி 9.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
அஸ்மத்துல்லா ஒமர்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.