ஆம்பூரில் இளைஞா் சடலம் மீட்பு
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலத்தின் கீழே இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
ஆம்பூா் - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலத்துக்கு கீழே இளைஞா் ஒருவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் இறந்தவா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில் இறந்தவா் புது மண்டி பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் கூலித் தொழிலாளி சரவணன்(38) என்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.