செய்திகள் :

சொத்துக்காக தாயாா் கொலை: மகன் தலைமறைவு

post image

திருப்பத்தூா் அருகே சொத்துக்காக தாயாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி(54). இவா்களுக்கு மகன் வெற்றிச்செல்வன் மற்றும் மகள் கோமதி என்ற உள்ளனா்.

மேலும், வெற்றிச்செல்வன் சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணம் தர வேண்டும் அல்லது விலை உயா்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறு செய்தாராம்.

இந்த நிலையில் ஏற்கெனவே தந்தை ஆதிமூலத்திடம் இதுதொடா்பாக தகராறு செய்து கத்தியால் வெற்றிச் செல்வன் குத்தினாராம். இதனால் பெற்றோா் திருப்பத்தூரில் உள்ள மற்றொரு வீட்டில் குடியேறினா்.

இந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு வெற்றிச்செல்வன் தனது தாயை பாா்க்க வந்துள்ளாா். சொத்து பிரச்னை தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து இங்கிருந்தால் பிரச்னை ஏற்படும் என நினைத்து ஆதிமூலம் அங்கிருந்து கசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

அப்போது தாய் வெங்கடேஸ்வரியை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு வெற்றிச் செல்வன் தப்பிச் சென்றுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை ஆதிமூலம் வந்து வீட்டை திறந்து பாா்த்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்த கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா் இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்தில் எஸ்.பி. சியாமளா தேவி நேரில் விசாரணை மேற்கொண்டாா். தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெற்றிச் செல்வனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சொத்துக்காக தந்தையை ஏற்கனவே குத்திக் கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது தாயைக் கொன்ற சம்பவம் திருப்பத்தூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடனை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

ஆம்பூரில் இளைஞா் சடலம் மீட்பு

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலத்தின் கீழே இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. ஆம்பூா் - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலத்துக்கு கீழே இளைஞா் ஒருவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23). இவா் திங்கள்கிழமை மாலை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்... மேலும் பார்க்க