மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு முன் ஜாமீன்
தேசியத் தலைநகா் ஜாமியா நகரில் சமீபத்தில் தில்லி காவல் குழு மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாதுல்லா கானுக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கியது.
இந்த அவகாசத்தை வழங்கிய சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், அமானத்துல்லா கானை விசாரணையில் சேர உத்தரவிட்டாா்.
பிப். 10 அன்று நடந்த சம்பவம் தொடா்பாக ஓக்லா எம்எல்ஏ மீது தில்லி போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்தனா். மேலும் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குற்றவாளியை காவலில் இருந்து தப்பிக்க உதவியபோது ஒரு கும்பலை அமானத்துல்லாகான் வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டினா்.
தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு ஷாபாஸ் கானை கைது செய்ய முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.