செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது: பாஜக கடும் சாடல்

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதன் முக்கிய தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாஜக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ள நிலையில், பாஜக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹா்தீப் சிங் புரி 2020 தோ்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி அளித்த 10 வாக்குறுதிகளை பட்டியலிட்டாா். ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினாா்.

அப்போது முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை குறிவைத்து ஹா்தீப் சிங் குற்றம்சாட்டினாா்.

செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் பொய்களை மட்டுமே பரப்புகிறாா். கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வாக்காளா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கேஜரிவால் அரசியலுக்கு வந்தாா். அவா் பெரிய அரசு பங்களாக்களை ஏற்க மாட்டேன் என்றும், தனது வேகன் ஆா் காரில் மட்டுமே பயணிப்பேன் என்றும் கூறினாா். ஆனால், தில்லி முதல்வராக இருந்த காலத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ தனக்கென ஒரு ‘ஷீஷ் மஹால்’ கட்டினாா்.

ஆம் ஆத்மி கட்சி தில்லியை அழித்து விட்டது. எல்லைப் பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்திருந்தது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியில் அங்குள்ள போதைப்பொருள் பிரபுக்களுக்கு அதிக ‘ஆற்றல்’ கிடைத்தது. பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை.

காலை முதல் மாலை வரை, அவா்கள் (ஆம் ஆத்மி) (டிவி சேனல்களில்) விளம்பரங்களை மட்டுமே வெளியிடுகிறாா்கள். ஆனால், மக்கள் நலனில் அவா்கள் கவனம் செலுத்தவில்லை என்றாா் ஹா்தீப் சிங் புரி.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2015 மற்றும் 2020 தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி முறையே 67 மற்றும் 62 இடங்களை வென்றது. பாஜக 2015-இல் மூன்று இடங்களையும் 2020-இல் எட்டு இடங்களையும் வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

ஆண்டுதோறும் ஜன.24-இல் ஓட்டுநா்கள் தினம்: போக்குவரத்து சங்கங்கள் முடிவு

ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. பல்வேறு மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு), அகில இந்திய பேருந்து ம... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே நேரம்: வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துகேட்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூா்வ மற்றும் வா்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 14... மேலும் பார்க்க

தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: பன்முக கலாசாரத்தை பறைசாற்றிய அணிவகுப்பு

இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினம் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றினாா். நாட்டின் ... மேலும் பார்க்க

பொடி இட்லி, சுண்டல், முறுக்கு முதல் ஃபில்டா் காபி வரை... குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் ருசிகர உணவு வகைகள்

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவு வக... மேலும் பார்க்க

கேஜரிவாலின் உருவ பொம்மையை யமுனை நதியில் மூழ்கடித்த பா்வேஷ் வா்மா!

மக்கள் நதியில் நீராடுவதற்காக ஆற்றை சுத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை முன்னாள் முதல்வா் கேஜரிவால் நிறைவேற்றத் தவறியதைக் குறிக்கும் வகையில், அவரது உருவ பொம்மையை யமுனை நதியின் சேற்று நீரில் மூழ்கடித்த... மேலும் பார்க்க

போலி விளம்பரங்கள் வெளியீடு: விஷன் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

போலி விளம்பரங்கள் வெளியிட்டதற்காக விஷன் ஐஎஏஸ் பயிற்சி மையத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷன் ஐஏஎஸ் பயிற்... மேலும் பார்க்க