செய்திகள் :

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

post image

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

சத்தீஸ்கரின் சுக்மாவில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதலின் முடிவில் 16 நக்கல்களைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்தனர்.

இதுதொடர்பாக அமித் ஷா எக்ஸ் பதிவில்,

பிரதமரின் தலைமையில், மார்ச் 31, 2026-க்கு முன்பு நக்சல்வாதத்தை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது. "ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது; அமைதி, வளர்ச்சி மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

சுக்மா மாவட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது 16 நக்சல்கள் கொல்லப்பட்டனர், இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு தீவிர நடவடிக்கையில் 20-க்கும் மேற்பட்ட நக்சல்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொ... மேலும் பார்க்க

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்து கூட்டுக்குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கருத்து தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று(ஏப். 2... மேலும் பார்க்க

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க