செய்திகள் :

“ஆயுதங்கள் அமைதியடைவதாக..” -உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் ஆண்டவர் கவலை!

post image

வாடிகன்: உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். நேரலையாக ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

அப்போது பேசிய போப் பிரான்சிஸ், “‘போர்; துப்பாக்கி ஏந்திய குழந்தைகள்; பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை’ இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்களுக்கு போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் பேசியதாவது, “போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் ஆயுதங்களின் ஒலி அமைதியடைவதாக; அங்கு அமைதி நிலவ வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படட்டும். பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படட்டும். போர், பசியால் தீரா களைப்படைந்துள்ள மக்களுக்கு உதவிப் பொருள்கள் சென்றடையட்டும்.

சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (லெபனான், சிரியா உள்பட மத்திய கிழக்கு பகுதிகள்) அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்குமான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கட்டும்.”

சுகாதாரப் பணியாளர்கள், சேவைத் தொண்டாற்றும் ஆண்கள், பெண்கள், தொண்டு நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் சேவையாற்றும் கிறிஸ்துவ மடங்கள் ஆகியோருக்கு நன்றியை உரித்தாக்குவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ், இன்னலில் தவிக்கும் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டோர் ஒளியை ஏற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொருவருக்கும் அமைதியான, ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் போப்.

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலி! 29 பேர் காயம்

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாக கஜகஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(டிச. 26) பு... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. ... மேலும் பார்க்க

2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, ... மேலும் பார்க்க