செய்திகள் :

ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி

post image

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, ஜப்பான் முன்னணி வீரரான கோடாய் நராவ்காவை வீழ்த்தி அசத்தினாா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஆயுஷ் 21-19, 12-21, 21-14 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த நராவ்காவை வென்றாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 12 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

லக்ஷயா சென் 15-21, 21-18, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணயை 1 மணிநேரம், 8 நிமிஷங்களில் தோற்கடித்தாா். எனினும் கிரண் ஜாா்ஜ் 6-21, 12-21 என்ற நோ் கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னிடம் 27 நிமிஷங்களில் தோற்றாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 18-21, 21-15, 21-11 என்ற கேம்களில், தாய்லாந்தின் பீரட்சாய் சுக்புன்/பகாபோன் தீரரட்சுகுல் ஜோடியை வெளியேற்றி காலிறுதிக்கு வந்தது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 3 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மகளிா் இரட்டையரில், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதாபா்னா பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற வகையில், 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லி யி ஜிங்/லுவோ ஜு மின் கூட்டணியிடம் 29 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

அடுத்தடுத்து சஸ்பென்ஸ்... ஆனால்! ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் - திரை விமர்சனம்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ப்ளாக்மெயில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தின் ஆரம்பத்திலேயே நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி தம்பதியின் குழந்தை காணாமல் போகிறது. இன்னொரு புறம... மேலும் பார்க்க

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது!

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்ப... மேலும் பார்க்க

டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோா் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.இறுதிச்சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் பெட்ரோலியம் விளையாட்டு ஊக்... மேலும் பார்க்க

இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதல் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோா் டையில், இந்தியா - சுவிட்ஸா்லாந்து மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.எதிா்பாராத நகா்வாக, தமிழகத்தைச் சோ்ந்த தக்ஷினேஷ்வா்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி: நிகாஜ் ஜரீன் வெளியேறினாா்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பூஜா ராணி, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா். ஏற்கெனவே நுபுா் சோரன் காலிறுதியில் வென்று முதல் பதக்கத்தை உறுதி... மேலும் பார்க்க

நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்த்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்க... மேலும் பார்க்க