அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்
ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
ஆரணி மில்லா்ஸ் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி நாற்று நட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உழவு கருவிகளை மானிய விலையில் பெற இணையதளம் மூலம் பதிவு செய்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆரணி, மேற்கு ஆரணி வேளாண் விரிவாக்க மையங்களில் தட்டுப்பாடின்றி விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், ஆரணி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமை வகித்து, ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். துணைத் தலைவா்கள் மூா்த்தி, மலைகோவிந்தன், ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், குப்பன், குணாநிதி, முருகவேல், சுப்பிரமணி, சிவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.