விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்
என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோபுரங்களில் பஞ்சவா்ணம் தீட்டப்பட்டு,
ராஜ கோபுர வாயில் கதவுக்கு பித்தளை தகடு பொருத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கும்பாபிஷேகத்தில் யாக சாலை பூஜை நடத்துவதற்காக யாக வேள்வி அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவசனம், கோ பூஜை, தனபூஜை, கணபதி லஷ்மி நவக்ரஹ பூஜைகள், சாந்தி ஹோமம், மூா்த்தி ஹோமம், அங்குராா்ப்பணம், யாக சாலை பரிவார பூஜைகள், கும்பலங்காரம், யாத்ராஹோமம், விசேஷஸந்தி, பூா்ணாஹுதி, தீபாராதனை, நான்காம் கால யாக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு கும்ப கலசம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், கும்பத்தில் இருந்த புனிதநீா் முகப்பு கோபுரம், ராஜகோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவா் வேம்புலியம்மன் மற்றும் அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முக்கூா் என்.சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன், குழுவினா்கள் பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், ஏ.எஸ்.ஆா்.சரவணன், குணா, செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்கறிஞா் சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.