செய்திகள் :

ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின் தந்தை வெறிச்செயல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள முக்குறும்பை ஊராட்சிக்குஉட்பட்ட அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனாலும், சில மாதங்களிலேயே கருத்து - வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மனைவி சென்றுவிட்டார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 பயிலும் 16 வயது மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் வடிவேலன். இது குறித்து மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், வடிவேலனை அழைத்து அவர்கள் கண்டித்திருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட வடிவேலன்

கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஊர் பெரியவர்களும் தலையிட்டு வடிவேலுவை எச்சரிக்கை செய்திருக்கின்றனர். அதன் பிறகும் அடங்காத வடிவேலன், தொடர்ந்து போன் மூலம் மாணவியிடம் பேச முயன்று தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை சங்கர் (46) தனது உறவினர் சிவஞானத்தை அழைத்துகொண்டு நேற்று முக்குறும்பை அருகேயுள்ள கோயில் பகுதியில் வடிவேலனை தாக்கும் திட்டத்துடன் காத்திருந்தார்.

நினைத்ததைபோலவே, வடிவேலன் அந்த வழியாக பைக்கில் வரும்போது, இருவரும் சேர்ந்து அவரை மடக்கி கட்டைகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கற்களைக் கொண்டும் தாக்கியதால், பலத்த காயமடைந்த வடிவேலன் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்ததும், அங்கு சென்ற வடிவேலனின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், வடிவேலன் இறந்துவிட்டதாகக் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இருவர்

இதனால், கதறி அழுத உறவினர்கள் ஆரணி - போளூர் சாலையில் திரண்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி டி.எஸ்.பி சுரேஷ் சண்முகம் தலைமையில் விரைந்து சென்ற களம்பூர் காவல் நிலைய போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மாணவியின் தந்தை உட்பட இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`இறந்துகிடந்த 50 மயில்கள்'- விவசாயி கைது

சங்கரன்கோவில் அருகே குருவிக்குளத்தில் 50 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி சரக வனத்துறையினர், வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் அங்குள்ள தோட்டங்களில் சோதன... மேலும் பார்க்க

Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த ... மேலும் பார்க்க

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது

நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.Australia Women's Teamகடந்த செப்டம்பர் 30 ஆம் ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் வேறு நபருடன் பழக்கம்? - 9 ஆண்டு காதலியை குத்தி குத்திக் கொன்று தற்கொலை செய்த வாலிபர்

மும்பை பரேல் பகுதியை சேர்ந்தவர் சோனு(24). வேலை இல்லாத சோனு ஏதாவது கேட்டரிங் வேலைகளுக்கு செல்வது வழக்கம். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனிஷா யாதவ்(24) என்ற பெண்ணை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ம... மேலும் பார்க்க

கோவை: `பல பெண்களுடன் தொடர்பு; முதல் திருமணத்தை மறைத்து.!’- காவலர் மீது புகார் அளித்த மனைவி

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

`சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டவில்லை; பணமும் பறிக்கவில்லை' - ரியாவுக்கு சிபிஐ நற்சான்று

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தற்கொலைக்கு சுஷ... மேலும் பார்க்க