செய்திகள் :

``ஆரம்பத்துல விக்கவே கஷ்டப்பட்டோம்... இப்போ நிலைமையே வேற..." - கலக்கும் சிற்பக்குழு பெண்கள்

post image

கார்த்திகை தீபத் திருநாளின் அழகே மண் விளக்கிலும், அதன் ஒளியிலும் தான். அந்த விளக்கை அற்புதமாக வடிவமைத்து, விற்று வருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் உள்ள கலைமகள் சுடுமண் சிற்பக் குழு. இவர்களிடம் விளக்குகள் மட்டுமல்ல...சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருட்களும் கிடைக்கின்றது.

இவர்களிடம் பேச, இவர்கள் இடத்துக்கு சின்ன விசிட் அடித்தோம்...

ரூ.10,000 முதலீடு...

"வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நாங்க மண்ணுல பொருட்கள் தயாரிக்கற தொழிலை கத்துகிட்டோம். ஆறு குழுக்கள் இருக்க 90 பெண்கள் ஒண்ணா சேர்ந்து முதன்முதல்லா மண் பொருட்கள் செய்யற தொழிலை ஆரம்பிச்சோம். இப்போ நாங்க இந்தத் தொழிலுக்கு வந்து மூணு வருசம் ஆகுது. இந்த தொழிலுக்கு வரும்போது அச்சு, மண் மாதிரி தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.10,000 முதலீடா போட்டோம். அதுவே எங்களுக்கு அப்போ மிகப்பெரிய தொகை.

எல்லாப் பொருளையும் வாங்குனதுக்கு அப்புறம், ஒவ்வொரு பொருளா செஞ்சு கடை கடையா ஏறி இறங்கினோம். ஆரம்பத்துல மண் பொருள் சீக்கிரம் உடைஞ்சுரும்னும், மக்கள் விரும்பி வாங்க மாட்டாங்கனும் கடைகாரங்க வாங்கல. அப்போ, என்ன பண்றதுனு தெரியல. அதனால, 'எங்க பொருள் வித்தா மட்டும் காசு கொடுங்க'னு சொல்லி கடைகள்ல கொடுத்துட்டு வந்தோம்.

ஆனா, இப்போ நிலைமையே வேற. நிறைய கடைக்காரங்க வாங்க வர்றாங்க. அட்வான்ஸ் கொடுத்து ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆர்டர் கொடுத்துட்டு போறாங்க. ஒவ்வொரு மாவட்டத்துலயும் மூணு டீலர் வரைக்கும் இருக்காங்க. ஆனா, நாங்க இருக்க மாவட்டம் விழுப்புரத்துல மட்டும் 10 டீலர்கள் இருக்காங்க.

தமிழ்நாட்டுல மட்டுமில்லாம...

தமிழ்நாட்டுல மட்டுமில்லாம கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கும் எங்க பொருட்கள் போகுது. இப்போ தான், கார்த்திகை தீபம் முடிஞ்சிருக்குல. அதுக்கு நாங்க 1 ரூபாய்ல இருந்து 10,000 ரூபாய் மதிப்பு வரைக்கும் விளக்குகள் செஞ்சு வித்தோம். எங்க விளக்கோடு தரம், பினிஷிங் பாத்த மக்கள் விரும்பி வாங்கிட்டு போனாங்க. ஏகப்பட்ட ஆர்டர்களும் குவிஞ்சுது.

விளக்குகளை சும்மா மண் விளக்கா மட்டும் செய்யாம, ஒன் ஸ்டெப் விளக்கு, டு ஸ்டெப் விளக்கு, ஹேங்கிங் அகல் விளக்கு, மேஜிக் அகல் விளக்கு, 5 ஸ்டார் விளக்குனு ஏகப்பட்ட புதுமையான விளக்குகளை தயார் செஞ்சு வித்தோம். அது அத்தனைக்கும் நல்ல வரவேற்பு இருந்துச்சு.

இந்த வருசம் மட்டுமில்ல, ஒவ்வொரு வருசமும் எங்க விளக்குகள்ல புதுமைகள் இருக்கும். இப்படி நாங்க புதுமையா அறிமுகப்படுத்துன விளக்குகள்ல அதிக டிமாண்ட் இருக்க விளக்குனா, அது போன வருசம் நாங்க அறிமுகப்படுத்துன 'மேஜிக் விளக்கு' தான். இந்த விளக்கு பாக்கறதுக்கு மத்த விளக்குகளைப் போலத் தான் இருக்கும். ஆனா, அதை கீழ திருப்பி, அங்க இருக்கும் குழியில எண்ணெய் ஊத்தி அஞ்சு நிமிஷம் கழிச்சு திருப்புனா, எண்ணெய் கீழே கொட்டாது. விளக்கு அழகா எரியும்.

இந்த வருசம் எங்களோட புது அறிமுகம், 'அறுபடை முருகன் விளக்கு'. முருகனை வேலா செஞ்சு அதுல ஆறு விளக்கு வெச்சு உருவாக்கி இருக்கோம்.

எங்களோட விளக்கு அவ்ளோ சீக்கிரம் உடையாது!

எங்களோட விளக்கு அவ்ளோ சீக்கிரம் உடையாது. இதுக்கு நாங்க 900 டிகிரில விளக்கை காய வெக்கறது தான் முக்கியமான காரணம். இதை நாங்க கஸ்டமர்களுக்கு கொடுக்கும்போது, ஒவ்வொரு லேயரிலும் வைக்கோல் வெச்சு விளக்குகளை பாக்ஸ்ல வெச்சு பக்காவா பேக் செஞ்சு டேப் ஒட்டி அனுப்பிவிடுவோம்.

ஆரம்பத்துல பொருட்களை விக்க கஷ்டப்பட்ட எங்களுக்கு, இப்போ மத்த மாதங்கள்ல ஒண்ணுல இருந்து ஒன்றரை லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்குது. பண்டிகை மாசங்கள்ல அஞ்சுல இருந்து ஏழு லட்சம் வருமானம் கிடைக்குது.

இந்தக் கார்த்திகை தீபத்துக்கு எங்கக்கிட்ட இருக்க ஒவ்வொரு டிசைன்லயும் 1,000-க்கும் மேற்பட்ட விளக்குகள் விற்பனை ஆயிருக்கு. மொத்தமா பாத்து ஒரு லட்சத்துக்கும் மேல விளக்கு வித்திருக்கு" என்று உற்சாகம் பொங்கு பேசுகிறார்கள் கலைமகள் சிற்பக் குழு பெண்கள்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Cryptic Pregnancy: `15 மாத கர்ப்பம்... கையில் குழந்தை' - பணம் பறிக்கும் மோசடி கும்பல்; உஷார் மக்களே!

``இது என்னுடைய குழந்தை தான்... நான் 15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை'' என்று விசாரணையில் ஒரு பெண் அடம்பிடிக்க... அடித்துக்கூற ஆடிப்போயிருக்கிறார்கள் அதிகாரிகள். இது நடந்தது இந்தியாவில் அல்ல, நைஜீரியாவில... மேலும் பார்க்க

கவனம்: 'ஆபீஸ் மீட்டிங்கிற்கு லேட்டாக செல்வீர்களா?!' - வெளிநாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஸ்கூல், காலேஜ் அல்லது ஆபீஸுக்கு ஒருநாளாவது லேட்டாக செல்லாத ஆட்கள் மிக மிக குறைவு. இன்னும் சிலர், ஆபீஸாக இருந்தாலும் சரி, மீட்டிங்காக இருந்தாலும் சரி லேட்டாக செல்வதை தங்களது வழக்கமாகக் கூட வைத்திருப்பா... மேலும் பார்க்க