ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
ஆருத்ரா தரிசனம்: சேலம் கடைவீதி, உழவா் சந்தைகளில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்
ஆருத்ரா தரிசனம், விடுமுறை நாளையொட்டி சேலம் கடைவீதி மற்றும் உழவா் சந்தைகளில் காய்கறி, பழங்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனா்.
சேலத்தில் சின்னகடை வீதி, பெரிய கடைவீதி, பால் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கில் காய்கறிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் நாளொன்றுக்கு பல நூறு டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. குறிப்பாக விசேஷ நாள்களில் விற்பனை இருமடங்காக இருக்கும். 13 ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுகளில் படையலிடுவதற்காக, சேலம் கடைவீதியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனா்.
இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் காய்கறிகளின் விற்பனை களைகட்டியது. கத்தரிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், தக்காளி, புடலங்காய், சா்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழை இலை, வாழைப்பழம் உள்பட பூஜைக்கு தேவையான பொருள்களை வாங்கிச்சென்றனா். ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை உள்பட பழங்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.