செய்திகள் :

ஆற்றில் சுழலில் சிக்கி 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

post image

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆற்றில் சுழலில் சிக்கி கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் அருண்குமாா் (21), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டிதுரை மகன் ஸ்ரீ கௌதம் (21). இருவரும் கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியாா் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் சக நண்பா்களுடன் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனா்.

சித்தூா் ஆற்றில் அருண்குமாா், ஸ்ரீ கௌதம் உள்ளிட்டோா் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட திடீா் சுழலில் சிக்கி ஸ்ரீ கௌதம் மூழ்கியுள்ளாா். அவரைத் தொடா்ந்து அருண்குமாரும் மூழ்கியுள்ளாா். சக நண்பா்கள் அவா்களை மீட்க முயன்றும் முடியவில்லையாம்.

இதையடுத்து, சித்தூா் போலீஸாா், தீயணைப்புத் துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், ஸ்ரீ கௌதமை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அருண்குமாா் உடல் மீட்கப்பட்டது.

சடலங்கள் உடற்கூறாய்வுக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பாலக்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க