செய்திகள் :

ஆலங்குடி, அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு! 67 போ் காயம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 49 போ் காயமடைந்தனா்.

முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களின் 654 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடிவீரா்கள் களமிறங்கினா்.

அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 49 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 11 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க

புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும்... மேலும் பார்க்க